‘தல‘-யுடன் இணையும் சந்தானம்.. சரவெடியாய் இருக்கப்போகிறது ‘அஜித் 62’

santhanam

அஜித்தின் 62வது படத்தில் பிரபல காமெடி நடிகர் சந்தானம் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு‘ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதையடுத்து அஜித்தின் 62வது படத்தின் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது. ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இப்படம் உருவாகவுள்ளது. 

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார். முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த படத்தில் திரிஷா நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலில் உண்மையில்லை என்றும், நடிகை காஜல் அகர்வால் நடிப்பதாக சமீபத்திய தகவல்கள் கசிந்துள்ளது. 

இந்நிலையில் அஜித்துடன் இணைந்து பிரபல காமெடி நடிகர் சந்தானம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக மட்டும் நடித்து வரும் சந்தானம் மீண்டும் காமெடி நடிகராக நடிப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த படத்தில் அரவிந்தசாமியும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story