அட்டகாசமாக தொடங்கும் ‘ஏகே 62’... அஜித்தின் படத்தின் சூப்பரான அப்டேட் !

ak62

அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

எச் வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு பிறகு அவர் இந்த படத்தை இயக்கவுள்ளார். லைக்கா தயாரிப்பில் உருவாகும் அஜித்தின் 62வது படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார். 

ak62

இந்த படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கலாம் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து எந்தவொரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

ak62

விறுவிறுப்பாக நடைபெறவுள்ள இந்த படப்பிடிப்பு வரும் மே மாதத்திற்கு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் தீபாவளிக்கு இந்த படத்தை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் பேசிய விக்னேஷ் சிவன், இந்த படத்தில் நடிகர் அஜித் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார் என்றும், அதனால் இந்த படம் என்னுடைய பாணியில் இருக்கும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story