மாஸ் கிளாஸ் இயக்குனருடன் 4வது முறையாக கூட்டணி... ‘தல’ அஜித்தின் புதிய பட அப்டேட் !

ak 63

தனது சூப்பர் ஹிட் இயக்குனருடன் மூன்றாவது முறையாக நடிகர் அஜித் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தல அஜித்தை மாஸ் கிளாஸ் லுக்கில் காட்டியவர் இயக்குனர் விஷ்ணு வரதன். ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், ‘பட்டியல்’ படத்தை படத்தை இயக்கினார். ரஜினியின் சூப்பர் ஹிட் படமான ‘பில்லா’  படத்தை தற்காலத்திற்கு ஏற்றாற்போல் இயக்கினார்.  இரண்டு பாகங்களாக வெளிவந்த இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதில் மாஸ் அஜித்தின் மாஸ் லுக், அவரை வேறு லெவலுக்கு கொண்டு சென்றது.

ak 63

இதையடுத்து ஆரம்பம் படத்தை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதைத்தொடர்ந்து சில ஆண்டு திரைப்படங்கள் இயக்காமல் இருந்த விஷ்ணு வரதன், நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் ‘ஷேர்ஷா’ என்ற பாலிவுட் படத்தை இயக்கினார். இந்த படம் இந்தியில் சூப்பர் ஹிட்டடித்தது. 

ak 63

இதற்கிடையே அஜித் நடிப்பில் ‘பில்லா 3’ படம் எப்போது உருவாகும் என நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில்  விஷ்ணு வரதன் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கவிருக்கிறாராம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறதாம். தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் ‘துணிவு’ படத்தை முடித்துள்ள அஜித், விரைவில் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு விஷ்ணு வரதன் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.  

 

 

Share this story