அஜித் பிறந்தநாள்... நினைவுகளை பகிர்ந்த மனைவி ஷாலினி...!

ajith

நடிகர் அஜித் குமார் இன்று 54வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரது மனைவி கடந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

நடிகர் அஜித்குமார், 1971ம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி பிறந்தவர். அந்த வகையில் இன்று அவருக்கு 53 வயது முடிந்து 54ஆவது வயது பிறந்துள்ளது. பிறந்தநாள் கொண்டாடும் அஜித் குமாருக்கு ரசிகர்களும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அஜித்தின் மனைவியான ஷாலினி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 2024ம் ஆண்டு கொண்டாடிய அஜித்தின் 53 வது பிறந்தநாளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


அந்த புகைப்படங்களில் ஷாலினி பைக்கில் அமர்ந்திருக்க அவர் பின்னால் அஜித்குமார் அமர்ந்தபடி போஸ் கொடுக்கிறார். இன்னொரு போட்டோவில் அவர்களுடன், அவர்களது மகளும் மகனும் இடம் பெற்றுள்ளார்கள். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கில் லைக்ஸ் பெற்று வருகிறது.  

Share this story