மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் பெயரை மாற்றிய அஜித்
1696601921073

நடிகர் அஜித் தனது மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் பெயரை திடீரென மாற்றியுள்ளார்.
நடிகர் அஜித் குமார் பைக் ரேசர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் பைக் ரேஸில் அதிகம் ஆர்வம் காட்டும் அவர், அண்மையில் மோட்டார் சைக்கிள் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். அதற்கு ஏகே ரைடு என்று பெயர் சூட்டினார்.
இந்நிலையில் AK MotoRide நிறுவனத்தின் பெயர் அஜித்தின் பெயரில் இருப்பதை விரும்பாத அவர், வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர் என்று மாற்றி வைத்துள்ளார். இனிமேல் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் என்ற பெயரில் பைக் சுற்றுலா நிறுவனத்தை அஜித் நடத்த உள்ளார். இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் தெரியாத ரசிகர்கள் குழம்பி உள்ளனர்.