"சத்தம் போட்ட ரசிகர்கள்" -அடுத்து அஜித் என்ன செஞ்சார் தெரியுமா ?
1760664629000
நடிகர் அஜித் "குட் பேட் அக்லி" என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் .அந்த படம் வெற்றிகரமாக ஓடி சாதனை புரிந்தது .அடுத்து அவர் ரசிகர்களை எப்படி கட்டுப்படுத்தினார் என்று நாம் இப்பதிவில் காணலாம்
ஒரு பக்கம் சினிமா மறுபக்கம் கார் ரேஸ் என அஜித் கலக்கிக்கொண்டிருந்தாலும், அவருடைய அடுத்த படத்தின் அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாதம் இறுதிக்குள் வெளிவரும் என கூறப்படுகிறது.
நடிகர் அஜித் வெளிநாட்டில் கார் ரேசிங்கில் இருக்கும்போது, அவரை சந்திக்க ரசிகர்கள் அங்கு செல்கிறார்கள். அப்போது எடுக்கப்படும் வீடியோக்கள் கூட அவ்வப்போது வெளிவருகிறது. மோட்டார் ஸ்போர்ட்ஸை அனைவரிடமும் கொண்டு செல்லுங்கள் என அவர் கூறிய வீடியோ கூட வைரலானது.
இந்த நிலையில், அஜித்தை சந்திக்க சென்றிருந்த ரசிகர்கள் தூரத்திலிருந்து அவரை பார்த்தவுடன், சத்தம்போட்டு கூச்சலிட்டனர். பின் ரசிகர்கள் சிலர் விசில் அடித்தனர். ரசிகர்கள் இப்படி ஆர்ப்பரித்தபோது அஜித் கடுப்பாகிவிட்டார். அஜித்தின் முகமே மாறிவிட்டது. அதன்பின், விசில் அடிக்காதீர்கள் என அஜித் விரலை காட்டி எச்சரித்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், ‘‘ஹீரோ என்றால் ரசிகர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அந்த விஷயத்தில் அஜித்தான் பெஸ்ட்’’ என கருத்து கூறி வருகிறார்கள்.