அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்..! விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

1

நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.. தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் “விடாமுயற்சி” திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  சென்னை முக்கிய பகுதிகளில் நடைபெற்றது.

மேலும் இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் பல முன்னணி பிரபலங்கள் சேர்ந்து நடித்து வருகின்றனர். மங்காத்தா படத்திற்கு பிறகு இந்த இரண்டு பேரும் அஜித்துடன் சேர்ந்துள்ளனர். மேலும் இதில் விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதனை முடித்தபின் குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் இணைவார்.

விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் உடன் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.

விடாமுயற்சிப் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக  உள்ளது.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் கடந்த ஆண்டு தொடக்கம் நடைபெற்று வருகின்றது. தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாக உள்ளது.  இது அஜித்தின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


 

Share this story