சென்னை மக்களுக்கு உதவி புரியும் அஜித் ரசிகர்கள்
மிச்ஜாம் புயல் மற்றும் இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவிலும், வகையிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். படகுகள் மூலம் மக்கள் பாதுகாப்பான இடங்களிலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அரசு அதிகாரிகள் மட்டுமன்றி திரைப்பிரபலங்களும், ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். நடிகர் விஜய், முடிந்த அளவு உதவி செய்யுமாறு தனது மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார். அதேபோல, அஜித் ரசிகர்களும் மறைமுகமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.