தம்பி அஜித்தின் தந்தை மறைவு.. வேதனையடைந்ததாக நடிகர் கமல் ட்வீட் !

kamal

தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல் என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம், நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். 86 வயதாகும் அவர் பக்கவாதத்தால் அவதிப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து வந்தார். மருத்துவர்கள் நீண்ட நாட்களாக சிகிச்சை அளித்து வந்தனர். நடிகர் அஜித், தனது அப்பாவை வீட்டிலேயே வைத்து பார்த்து வந்தார். 

kamal

இந்நிலையில் இன்று நீண்ட நேரம் எழுந்திருக்காமல் இருந்த நிலையில் தூக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்திருக்கிறது. இதையடுத்து சில மணி நேரங்களிலேயே பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் சுப்ரமணியத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. அஜித்தின் தந்தை உயிரிழந்ததை அடுத்து நடிகர் விஜய், இயக்குனர் பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள் நேரில் சென்று தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். 

kamal

இந்நிலையில் நடிகர் கமலஹாசன், அஜித்தின் தந்தை மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தம்பி #Ajithkumar அவர்களின் அப்பா திரு. சுப்பிரமணியம் மறைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.  


 

Share this story