அஜித், ஷாலினியின் 26வது திருமண நாளையொட்டி ரீரிலீஸ் ஆகும் படம்

ajith
அஜித் குமார் நடித்த 25வது படமாகவும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற கல்ட் கிளாசிக் படமாகவும் ‘அமர்க்களம்’ அமைந்தது. சரண் இயக்கத்தில் கடந்த 1999ல் திரைக்கு வந்து வெற்றிபெற்ற இப்படம், வரும் 24ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில் ஜோடி சேர்ந்த அஜித் குமாரும், ஷாலினியும் பிறகு காதல் திருமணத்தின் மூலம் வாழ்க்கையில் இணைந்தனர்.
வரும் 24ம் தேதி அஜித் குமார், ஷாலினி யின் 26வது திருமண நாளையொட்டி இப்படம் மறுவெளியீடு செய்யப்படுகிறது. பரத்வாஜ் இசையில் ‘சொந்த குரலில் பாட’ என்ற பாடலை ஷாலினி பாடியிருந்தார். 4கே டிஜிட்டல் மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ள இப்படத்தை ஸ்பேரோ சினிமாஸ் சார்பில் கார்த்திக் வெங்கடேசன் தமிழ்நாடு முழுவதும் திரைக்கு கொண்டு வருகிறார்.

Share this story