டிஜிட்டலில் வெளியாகும் 'அமராவதி'... அஜித் பிறந்தநாளையொட்டி சிறப்பு ஏற்பாடு !

amaravathi

அஜித்தின் முதல் பாடமான 'அமராவதி' டிஜிட்டலில் தயாராகியுள்ள நிலையில் விரைவில் வெளியாக உள்ளது. 

தென்னிந்தியாவில் மிகப்பெரிய நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அஜித் படம் வெளியாகிறது என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த அளவிற்கு ரசிகர்களிடையே நன் மதிப்பை அஜித் பெற்றுள்ளார். 

amaravathi

நடிகர் அஜித் தமிழில் முதன்முதலில் நடித்த ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌திரைப்படம் :அமராவதி'. கடந்த 1993-ஆம் ஆண்டு இயக்குனர் செல்வா இயக்கத்தில் வெளியானது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக சங்கவி நடித்திருந்தார். இவர்களுடன் கவிதா, நாசர், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், சார்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

சோழா கிரியேஷன் சார்பில் சோழா பொன்னுரங்கம் இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில் இந்த படம் வெளியாகி 30 ஆண்டு கடந்துள்ள நிலையில் தற்போது டிஜிட்டல் வெர்ஷனில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் மாதம் அஜித் பிறந்தநாளையொட்டி இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இது அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

Share this story