மீட்கப்பட்ட அமீர்கான்-விஷ்ணு விஷால்!- பயண உதவிகளை செய்த தல அஜித்.

photo

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அமீர் கான் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட நிலையில், அவர்களது பயணத்திற்கு முதல் ஆளாக ஓடி வந்து உதவி செய்துள்ளார் தல அஜித்.

photo

மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னையே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மக்கள் அன்றாட வாழ்கையை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை காரப்பாக்கம் பகுதியில் வீடுகளை சுற்றி வெள்ளம் சூழந்த நிலையில் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல், மீட்க ஆள் இல்லாமல் நடிகர் விஷ்ணு விஷால் தவிப்பதாக தனது சமூகவலைதள பக்கத்தில் புகைப்படம் மூலம் பகிர்ந்திருந்தார்.

photo

அந்த பதிவை தொடர்ந்து உடனடியாக மீட்கப்பட்டுள்ளனர் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது குடும்பத்தினர். அதே பகுதியில் தன்னுடைய தாயாரின் சிகிச்சைக்காக தங்கியிருந்த பாலிவுட் நடிகர் அமீர் கானும் பத்திரமாக மீட்கப்பட்டார். இந்த தகவல் குறித்து கேள்விப்பட்ட நடிகர் அஜித் நடிகர்களான விஷ்ணு விஷால் மற்றும் அமீர் கானை நேரில் சந்தித்து கமிட்டி மெம்பர்ஸ் வில்லவிற்கு செல்ல அவர்களுக்கு கார் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இந்த தகவலை புகைப்படத்துடன் நடிகர் விஷ்ணு விஷால் தனது  எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.


 

Share this story