இத்தாலி கார் ரேஸில் கலந்து கொண்ட அஜித் -அங்கு என்னாச்சி தெரியுமா ?

ajith

நடிகர் அஜித் நடிப்பதை தவிர கார் மற்றும் பைக் ரேஸில் ஆர்வமுள்ளவர் .இதனால் அவர் ஓய்வு நேரத்தில் துபாய் மற்றும் பல வெளி நாடுகளில் கார் ரேஸில் கலந்து கொள்வார் .சமீபத்தில் கூட துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் கலந்து கொண்டார் .அப்போது கூட சிறு விபத்தில் அவரின் கார் சிக்கியது .பின்னர் போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற கார் ரேஸில் கூட சிறு விபத்தில் அவரின் கார் சிக்கியது .அப்போது அவர் எந்த காயமின்றி தப்பினார் .
நடிகர் அஜித் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லீ ஆகிய படங்கள் வெளியான நிலையில் குட் பேட் அக்லீ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படங்களைத் தொடர்ந்து இதுவரையில் எந்த படத்திலும் அஜித் கமிட்டாகவில்லை. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் படத்தை இயக்க இருப்பதாக கோலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது 
இப்போது இத்தாலியில் நடைபெற்று வரும் ஜிடி 4 கார் ரேஸ் போட்டியின் 2 ஆவது நாளில் அஜித் குமார் சென்ற கார் டிராக்கில் நின்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அஜித் காருக்கு முன்னே சென்ற கார் திடீரென்று டிராக்கில் நின்றதால் அஜித் குமார் கார் நின்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜித்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் அஜித் கார் சேதமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story