கேஜிஎப் இயக்குனருடன் இணைகிறாரா நடிகர் அஜித்?

ajith

மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித் குமார், அதன் பின்னர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தையும் விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், அஜித்குமார் சமீபத்தில் இயக்குனர் பிரஷாந்த் நீலை சந்தித்து இரண்டு படங்களில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முதல் படம் ஒரு தனி படமாக இருக்கலாம் எனவும் இரண்டாவது படம் யாஷின் 'கேஜிஎஃப்' படத்துடன் தொடர்பு உள்ள படமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.



இருப்பினும், இந்தத் திட்டங்கள் தொடங்கப்படுவதற்கு குறைந்தது ஒரு வருடம் ஆகும் என தெரிகிறது. இரண்டு படங்களையும் ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கவுள்ளார்.

Share this story