சென்னை திரும்பிய ‘அஜித்’, விரைவில் முடிவிற்கு வரும் ‘ஏகே 62’ குறித்த சர்ச்சை.

photo

வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்த  நடிகர் ஆஜித்குமார் சென்னை திரும்பியுள்ள செய்தியை அறிந்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

photo

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் மற்றும் விஜய்யின் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றன. அதனை அடுத்து விஜய்யின் அடுத்த படத்திற்கான தலைப்பு அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு வேலைகள் விறுவிறிப்பாக நடந்து வரும் நிலையில், நடிகர் அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்றுகூட அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக வில்லை.

photo

 துணிவு படம் ரிலீஸ் ஆன பிறகு நடிகர் அஜித் போர்ச்சுகள் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்தார். லைக்கா தயாரிக்க இருக்கும் அஜித்தின் ‘ஏகே62’ திரைப்படத்தின் இயக்குநராக முதலில் விக்னேஷ் சிவன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் பரவியது, தொடர்ந்து அவருக்கு பதில் இயக்குநர் மகிழ்திருமேனியின் பெயர் அடிபட்டது. இப்படி மாறிமாறி தகவல் பரவி வருவதால் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்துள்ளனர்.

photo

நிலைமை இப்படி இருக்க நடிகர் அஜித் தனது சுற்று பயணத்தை  முடித்து கொண்டு, சென்னை திரும்பியுள்ளதாக சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் சில ரசிகர்களுடன் நடிகர் அஜித் குமார் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி அதனை உறுதிபடுத்தியது. இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தொடர்ந்து விரைவில் ஏகே62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Share this story