துபாயில் மகளின் பிறந்தநாளை கொண்டாடிய அஜித்குமார்
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் அங்கே தான் தொடர்கிறது. இந்த படத்தின் அஜித்துடன் இணைந்து ஆக்ஷன் கிங் அர்ஜூன், த்ரிஷா, பிரியா பவானி ஷங்கர், ஆரவ், ரெஜினா ஆகியோர் நடிக்கின்றனர்.சமீபத்தில் அஜித் உடன் இணைந்து உணவகம் ஒன்றில் அர்ஜூன், ஆரவ் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் நடிகர்களின் படங்கள் வெளியாகி பட்டையை கிளப்பியது.
AK Family in Dubai!pic.twitter.com/Z7i8R4EyT7
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 2, 2024
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் குடும்பத்துடன் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் தற்போது துபாயில் தன் மகளின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அப்போது பிரம்மாண்ட போட் ஒன்றில் அஜித் தன் குடும்பத்துடன் செல்ல அதை பார்த்த ரசிகர்கள் அந்த இடத்திலும் அஜித்தை பார்த்துவிட்டு தல என கூச்சலிட்டு வீடியோ எடுத்து இருக்கின்றனர்.