முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் அளித்துள்ள அஜித் குமார்!

முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்  அளித்துள்ள அஜித் குமார்!

நடிகர் அஜித்குமார், முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் நிதி அளித்துள்ளார்.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமாகி வருகிறது. எனவே அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க முயற்சி செய்து வருகின்றது.

சமீபத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நிதி அளித்து பொதுமக்கள் பங்கெடுத்துக் கொள்ள முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் கோரிக்கை வைத்தார். அதையடுத்து முதல்வர் நிவாரண நிதிக்கு உதவிகள் குவிந்து வருகின்றன.

முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்  அளித்துள்ள அஜித் குமார்!

திரைத்துறை பிரபலங்களும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் சூர்யா குடும்பத்தினர் ஒரு கோடி, இயக்குனர் ஏஆர் முருகதாஸ் 25 லட்சம், இயக்குனர் சிஎஸ் அமுதன் 50000 ரூபாய் அளித்து உதவியுள்ளனர்.

தற்போது நடிகர் அஜித்குமார் முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். அஜித் 2.50 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாகத் தகவல் பரவி வருகிறது. ஆனால் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள தகவலில் 25 லட்சம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story