வெளிநாட்டில் பைக் ரைடு சென்ற அஜித்குமார்.... வைரலாகும் வீடியோ

வெளிநாட்டில் பைக் ரைடு சென்ற  அஜித்குமார்.... வைரலாகும் வீடியோ

அரபு நாடான ஓமனில் அஜித் பைக்கில் செல்லும் காணொலி சமூக வலைதளங்களில் வௌியாகியுள்ளது. 

நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. படப்பிடிப்பு எப்போதுதான் தொடங்கும் என்றும், படத்தில் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. காணொலி வெளியாகியுள்ளது. அஜித்தை அடையாளம் கண்ட ரசிகர் ஒருவர், அவருடன் உரையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


 

Share this story