அமீர் கான், விஷ்ணு விஷாலை நேரில் சந்தித்த அஜித்குமார்

Tamil superstar Ajith Kumar comes to the rescue of Aamir Khan who was stuck in Chennai floods

சென்னையில் மிச்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவிலும், வகையிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். படகுகள் மூலம் மக்கள் பாதுகாப்பான இடங்களிலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை காரப்பாக்கம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி நடிகர் அமீர்கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

அமீர் கான், விஷ்ணு விஷாலை நேரில் சந்தித்த அஜித்குமார்

அவர்களை நேரில் சந்தித்த நடிகர் அஜித்குமார் நலம் விசாரித்தார். அதையடுத்து, விஷ்ணு விஷால் மற்றும் அமீர் கானின் பயணங்களுக்கு அவர் உதவி செய்துள்ளார். இதனை டிவிட்டரில் தெரிவித்த விஷ்ணு விஷால், அஜித்துக்கு நன்றி கூறியுள்ளார். 

Share this story