புகைப்படம் எடுக்க மறுத்த அஜித்குமார்... வீடியோ வைரல்..

புகைப்படம் எடுக்க மறுத்த அஜித்குமார்... வீடியோ வைரல்..

தன்னை புகைப்படம் எடுக்க வந்த ரசிகரிடம், போட்டோ எடுக்காதீங்க என அஜித்குமார் கட்டளையிட்ட காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். துணிவு படத்தை தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் படம் விடாமுயற்சி. மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு சில நாட்களில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது

இந்நிலையில், அண்மையில் அஜித்குமார் சென்னையில் உள்ள ஹில்டன் சொகுசு விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் அஜித்தை போட்டோ எடுக்க முயற்சி செய்து இருக்கிறார்.


அதற்கு அஜித், போட்டோ எடுக்காதீங்க என்று அந்த ரசிகருக்கு அன்பு கட்டளையிட்டார். இருப்பினும் அந்த அஜித்தை வீடியோ எடுத்து சென்று கொண்டிருந்தார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

Share this story