ஸ்போர்ட்ஸ் பைக்கில் மாஸ் காட்டும் அஜித் குமார் ; வீடியோ வைரல்

ajith

நடிகர் அஜித் நடிப்பில் வருகிற 6-ந்தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'. பல எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரேசிங்கில் ஆர்வமுடைய அஜித் படப்பிடிப்புகள் முடிந்த உடன் கடந்த சில வாரங்களாக வெளிநாட்டில் கார், பைக் ரேசிங்கில் பிசியாக உள்ளார். அவர் ரேசிங்கில் பங்கேற்கும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.



இதனிடையே, கலைத்துறையில் சிறப்பான சேவையாற்றியதற்காக நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். நேற்று அஜித் மகன் ஆத்விக் பள்ளியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஓட்டப்பந்தயத்தில் ஆத்விக் பங்கேற்று வெற்றி பெற்ற வீடியோவை ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அது வைரலானது.
இந்த நிலையில், தற்போது அஜித் பைக் ஒன்றில் உட்கார்ந்து இருப்பதும், அதனை ஓட்டுவது போல் செய்கை காண்பிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முகம் முழுக்க சிரிப்புடன் பைக்கில் உட்கார்ந்து அதனை ஓட்டுவது போன்றும், அதில் ஸ்டைலாக போஸ் கொடுப்பதுமான காட்சிகளை அஜித் ரசிகர்கள் எடிட் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Share this story