“நானும் இரண்டு குழந்தைகளுக்கு தந்தைதான்” – இதயங்களை வென்ற ‘அஜித்’.

photo

விமான பயணத்தின் போது தனியாக 10-மாத குழந்தையுடன் பயணம் செய்த பென்ணிற்கு நடிகர் அஜித்குமார் உதவியது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

photo

கோலிவுட்டின் முன்னணி நடிகராக திகழும் நடிகர் அஜித்குமார் நடிப்பதை தாண்டி உலகம் சுற்றுவதில் ஆர்வம் கொண்டவர், அதிலும் அவர் பைக்கில் வலம்வர அதீத ஈடுபாடு கொண்டுள்ளார். அதேப்போல அடிக்கடி வெளிநாடு சென்று ரிலாக்ஸ் செய்தும் வருகிறார். இந்த நிலையில் கிலாஸ்கோவிலிருந்து சென்னை வந்தபோது 10 மாத குழந்தையுடன் தனியாக பயணித்த பெண்ணிற்கு அஜித் உதவியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

photo

கைக்குழந்தையுடன் விமான நிலையத்தில் தூக்க முடியாமல் பொருட்களை தூக்கி வந்த பெண்ணிற்கு நடிகர் அஜித் பொருட்களை தூக்கி உதவி செய்துள்ளார். அந்த பெண்ணிடம் நானுன் இரண்டு குழந்தைகளுக்கு தந்தைதான் . இந்த உணர்வை என்னால் புரிந்துகொள்ள் முடிகிறது என கூறியதாக அந்த பெண்ணின் கணவர் தனது மனைவி அஜித்துட எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து  இணையத்தில் இந்த தகவலை ஷேர் செய்துள்ளார்.  இதனை தொடர்ந்து அஜித் பந்தா இல்லாத ஒரு நல்ல மனிதர் என புகழந்து  வருகின்றனர்.

Share this story