அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ டிவி ஒளிபரப்பு உரிமையில் சிக்கல்!

1

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், யோகி பாபு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. தற்போது அதில்தான் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ திரைப்படம் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பில் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனால், ‘குட் பேட் அக்லி’ படத்தை திரும்ப கொடுத்துவிட்டது சன் நிறுவனம். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது ‘குட் பேட் அக்லி’ தொலைக்காட்சி உரிமைக்காக விஜய் தொலைக்காட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி ஒளிபரப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

‘குட் பேட் அக்லி’ கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளது. இதனை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான படப்பிடிப்பு இடங்கள் தேர்வு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு ஆகியவை மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Share this story