சால்ட் அண்ட் பெப்பரில் படு ஸ்லிம்மாக காட்சியளிக்கும் அஜித்... ‘குட் பேட் அக்லி’ புகைப்படம் வைரல்!

ajith

வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியகவுள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்துவரும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிப்பதை சமீபத்தில் நடிகர் பிரசன்னா உறுதி செய்தார். பொழுதுபோக்கு படங்களை மிகவும் வித்தியாசமான விதத்தில் தயார் செய்வது மூலம் ஆதிக் ரவிச்சந்திரன் கவனம் பெற்றார்.

கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'மார்க் ஆண்டனி' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஷால் கதாபாத்திரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் அஜித்குமார் தனது வெறி பிடித்த ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் அஜித்குமார் இரண்டு அல்லது மூன்று வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.



‘குட் பேட் அக்லி’ படத்தின் ஃபர்ஸ்க் லுக்கில் அஜித்குமார் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மிரட்டியிருந்தார். இந்நிலையில் அஜித்குமார் சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடியுடன் பிளாக் பியர்டுடன் உள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்திற்காக அஜித்குமார் உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தில் இரண்டு கைகளிலும் வித்தியாசமான டாட்டு வரைந்துள்ளார். ‘குட் பேட் அக்லி’ படப்பிட்ப்பு 50 சதவிதம் முடிவடைந்துள்ள நிலையில், பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது.

Share this story