'குட் பேட் அக்லி' படத்தின் இயக்குனரின் அடுத்த படம் -ஹீரோ யார் தெரியுமா ?

good bad ugly

அஜித் நடித்த 'குட் பேட் அக்லி'  படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார் .இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்
 இந்த படம் நல்ல வசூலை அள்ளியது .பல நூறு கோடிகளை வசூலித்து தந்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை இயக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரம் கூறுகிறது 

அஜித்தின் சினிமா கேரியரிலேயே அதிக வசூலை அள்ளிய சாதனையை குட் பேட் அக்லி திரைப்படம் படைத்தது. மேலும் 'குட் பேட் அக்லி' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ''ஏகே 64' படத்தை ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்கப் போகிறார் என்று ஹிண்ட் கொடுத்திருந்தார்.
அதன்படி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் 'ஏகே 64' நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வரும் அஜித், 025 அக்டோபர் மாதம் வரை சினிமாவிலிருந்து பிரேக் எடுத்திருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்நிலையில், அஜித்தின் 'ஏகே 64' படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, 'ஏகே 64' படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளதாகும் என தகவல் கிடைத்துள்ளது.

Share this story