அஜித்திற்கு ஜோடி திரிஷா இல்லையா ?... யாருன்னு கேட்டா ஷாக்காகிடுவீங்க !

ajith 62

 அஜித்தின் அடுத்த படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவில் மாஸ் நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவரது படங்களுக்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக ‘துணிவு’ படத்தில் நடித்துள்ளார். 

ajith 62

இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். லைக்கா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார். முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

ajith 62

ஏற்கனவே நயன்தாரா, திரிஷா ஆகிய இருவரில் ஒருவர் கதாநாயகியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதன்பிறகு திரிஷா தான் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ‘விவேகம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story