அஜித்தின் அடுத்த படம் -எந்த நடிகருடன் இணைந்து நடிக்க உள்ளார் தெரியுமா ?

நடிகர் அஜித் நடிக்கும் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
நடிகர் அஜித்தின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தான் தொடங்கப்பட உள்ளது. நடிகர் அஜித் ஒரு இயக்குனருடன் பணியாற்றும் போது அவர்களின் ஒர்கிங் ஸ்டைல் பிடித்துவிட்டால் அவர்களுடனே தொடர்ந்து பணியாற்றுவார். உதாரணத்திற்கு சிறுத்தை சிவா உடன் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ச்சியாக நான்கு படங்களில் பணியாற்றினார். அதேபோல் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தபோது எச்.வினோத்தின் ஒர்கிங் ஸ்டைல் பிடித்துப் போனதால் அவருடன் அடுத்தடுத்து வலிமை, துணிவு போன்ற திரைப்படங்களில் பணியாற்றி இருந்தார் அஜித்.இந்நிலையில் குட் பேட் அக்லீ படத்தில் நடித்த அஜித் அந்த இயக்குனருடன் அடுத்த படத்திலும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்த புதிய படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், படம் பான்- இந்தியா படமாக, பல மொழி ரசிகர்களைக் கவரும் வண்ணம் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது
இந்நிலையில், 'ஏகே 64' படத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக மோகன் லாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
குட் பேட் அக்லி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அஜித் மற்றும் ஆதிக் கூட்டணி மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது