அஜித்தின் அதிரடி முடிவு –‘விடாமுயற்சி’ படக்குழுவினருக்கு முதல்ல இத பண்ணுங்க….

photo

பிரபல கலை இயக்குநர் மிலன் படப்பிடிப்பு சமயத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். இது படக்குழு மட்டுமல்லது அனைவரையின் அதிர்ச்சியடைய வைத்தது. இந்த நிலையில் எனது படத்தின் இது கட்டாயம் என நடிகர் அஜித் முழு உடல் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

photo

நடிகர் அஜித் இயக்குநர் மகிழ் திருமேனியுடன் ‘விடாமுயற்சி’ படத்திற்காக இணைந்துள்ளார். இந்த படத்தில் த்ரிஷா, பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் இணைந்துள்ளனர். படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. அங்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் படத்தின் கலை இயக்குநரான மிலனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

photo

இந்த நிலையில் நடிகர் அஜித் படத்தின் பணிகள் விடுங்க முதல்ல உடல் நலன பாருங்க என்பது போல ஆண்டிற்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்ய அறிவுறுத்தினார். மேலும் மிலனின் மரணம் தன்னை மிகவும் பாதித்ததாகவும் வருத்தப்பட்டு, இனி தனது அனைத்து படங்களிலும் மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்குவேன் என கூறியுள்ளாராம். தொடர்ந்து படக்குழுவுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய ஏற்பாடு நடக்கிறதாம்.  

 

Share this story