GOAT டிரைலரை பார்த்து அஜித் சொன்ன விஷயம் - வெங்கட் பிரபு லேட்டஸ்ட் அப்டேட்

Venkat prabhu ajith
நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,
படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் ஒரு பக்கா ஆக்ஷன் கமெர்ஷியல் திரைப்படமாக அமைந்துள்ளது. டிரைலர் வெளியீட்டு விழாவில் வெங்கட் பிரபு கூறியதாவது " கோட் படத்தின் டிரைலரைப் பார்த்து நடிகர் அஜித் குமார், டேய் சூப்பரா இருக்கு டா. என்னோட வாழ்த்துகளை விஜய் மற்றும் படக்குழுவினர் தெரிவித்துவிடு" என்று கூறினார் என தெரிவித்தார்.

Share this story