அப்படி போடு!…….- ரூ. 250 கோடிக்கு விற்பனையான அஜித்தின் ‘விடாமுயற்சி’!

photo

தல அஜித் நடிப்பில் தயாராகிவரும் ‘விடாமுயற்சி’ படம் ரிலீசுக்கு முன்பே ரூ. 250 கோடி சம்பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் அங்கே தான் தொடர்கிறது.  இந்த படத்தின் அஜித்துடன் இணைந்து ஆக்ஷன் கிங் அர்ஜூன், த்ரிஷா, பிரியா பவானி ஷங்கர், ஆரவ், ரெஜினா ஆகியோர் நடிக்கின்றனர்.

சமீபத்தில் அஜித் உடன் இணைந்து உணவகம் ஒன்றில் அர்ஜூன், ஆரவ் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் நடிகர்களின் படங்கள் வெளியாகி பட்டையை கிறப்பியது. இந்த நிலையில் தற்போது படத்தின் டிஜிட்டல் உரிமை வியாபாரம் குறித்த தகவல் வந்துள்ளது. அதன்படி சாட்டிலைட் உரிமையை ரூ. 100 கோடிக்கு சன்டிவி வாங்கியுள்ளதாம். அதேப்போல ஓடிடி உரிமையை நெட்ஃபிளிஸ் ரூ. 150 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. மொத்தமாக படம் ரிலீசுக்கு முன்பே ரூ. 250 கோடி வசூலித்து பட்டையை கிளப்பியுள்ளது.

Share this story