உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு………- ‘அஜித் ஷாலினி’யில் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.

photo

அஜித் ஷாலினி தம்பதி தங்களது 23வது திருமணநாளை கொண்டாடிய நிலையில் அவர்களது லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

photo

கோலிவுட்டில் ரீல் ஜோடியா இருந்து ரியல் ஜோடியாக மாறியவர்கள் அஜித்- ஷாலினி. ‘அமர்க்களம்’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஷாலினி நடித்திருந்தார். இவர்கள் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படமும் அதுதான். அப்போது தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. முதலில் அஜித்தான் ஷாலினியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து அஜித் காட்டிய அக்கறையால் ஒரு கட்டத்தில் ஷாலினிக்கும் அஜித்மீது காதல் வந்துள்ளது. இருவரும் கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

photo

இன்றுவரை அதே அன்போடு ஒன்றாக வாழ்ந்து வரும் இந்த தம்பதி நேற்று தங்களது 23வது திருமண நாளை கொண்டாடினார்கள். திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறினர். இந்த நிலையில் அஜித்-ஷாலினி தம்பதியின் திருமண நாள் கொண்டாட்ட புகைப்படம் வெளியாகியுள்ளத அஜித் ஷாலினி கன்னத்தோடு கன்னம் வைத்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Share this story