அஜித் சார் ஒரு அல்டிமெட் ஜென்டில்மேன்... நடிகர் பிரசன்னா நெகிழ்ச்சி...!

prasanna

 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில்,  அஜித் உடன் நடித்த அனுபவத்தை நடிகர்  பிரசன்னா பகிர்ந்துள்ளார். 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் நேற்று இரவு முதலே திரையரங்குகளில் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, அஜித்துடன் நடித்தது குறித்து அவருடன் பணியாற்றிய நடிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அஜித்துடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாக நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்து இருந்தார்.


இதனை தொடர்ந்து நடிகர் பிரசன்னா எக்ஸ் தள பக்கத்தில், எனக்குப் பிடித்த நடிகருடன் சேர்ந்து நடித்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. இந்த அல்டிமெட் ஜென்டில்மேன் உடன் செலவிட்ட தருணங்களை எப்போதும் நினைவில் கொள்வேன், லவ் யூ அஜித் சார். ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நன்றி... இதோ ராஜா வருகிறார் என பதிவிட்டுள்ளார். 

Share this story