வெறித்தனம் செய்துள்ள அஜித்... ட்விட்டர் விமர்சனம் !

thunivu

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'துணிவு' படத்தின் ட்விட்டர் விமர்சனம் வெளியாகியுள்ளது. 

 எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'துணிவு'. வங்கிக் கொள்ளையை கதைக்களமாக கொண்ட இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த படம் இன்று அதிகாலை 1 மணிக்கு திரையரங்குகளில் வெளியானது. 

thunivu

இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த ட்விட்டர் விமர்சனம் வெளியாகியுள்ளது. 

முதல் பாதி அஜித்தின் முழுமையான சம்பவமாக இந்த படம் உள்ளது. இரண்டாம் பாதி வங்கி மோசடி குறித்த கதை இடம்பெற்றுள்ளது. அஜித் இந்த படத்தில் வெறித்தனம் செய்துள்ளார். அஜித் ரசிகர்களுக்கு இந்த செம்ம விருந்தாக அமையும். மஞ்சு வாரியர் நன்றாக நடித்துள்ளார். சாதாரண மக்களை இந்த படம் நிச்சயம் கவரும். இயக்குனர் வினோத்தின் தரமான சம்பவம். 

அஜித் சார் மற்றும் எச் வினோத் ஆகிய இருவரும் இந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்து படமாக தந்ததற்கு தலை வணங்குகிறேன். 

இந்த படத்திற்கு 5-க்கு 3 என்ற மதிப்பெண் கொடுக்கலாம். ஒரே சரவெடிதாம். வங்கிக்கொள்ளை மற்றும் அதன் பின்னால் உள்ள கதைக்களம் தான் இந்த படம். அஜித் ரசிகர்கள் மற்றும் இளைஞர்களை இந்த படம் திருப்திப்படுத்தும். 

 

துணிவு திரைப்படம் பல திருப்பங்கள் நிறைந்த வங்கி திருட்டு கதைக்களம் கொண்ட திரைப்படம். அஜித் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மஞ்சு வாரியரின் நேர்த்தியான கதாபத்திரம் ரசிக்க வைத்துள்ளது. இந்த படத்தை ரசனையாகவும், சுவாரஸ்யமாகவும் இயக்குனர் எச் வினோத் கொடுத்துள்ளார். 


 


துணிவு திரைப்படத்தின் முதல் பாதி ப்ளாக் பஸ்டர். இரண்டாம் பாதி அஜித்தின் சம்பவம் மற்றும் எச் வினோத்தின் திரைக்கதை நன்றாக அமைந்துள்ளது. 


நீண்ட நாள் கழித்து அஜித்திற்காக எழுதப்பட்ட சிறந்த கதையாக இந்த படத்தை பார்க்கிறேன். இந்த படத்தின் கதை ஆராய்ந்து கதையை உருவாக்கியிருக்கிறார் எச் வினோத்.  

Share this story