அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் வெளியானது.
-=\3இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்து திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியது. படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நேரளவு 2 மணி நேரம் 19 நிமிடங்களாக அமைந்துள்ளது.
#WATCH | Chennai | Fans celebrate outside a theatre in Koyambedu as actor Ajith starrer 'Good Bad Ugly' releases today pic.twitter.com/CfuXmQHNhx
— ANI (@ANI) April 10, 2025
இதனை தொடர்ந்து, 'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம் அலைமோதியது. படம் வெளியாவதையொட்டி நேற்று இரவு முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தனர். திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து, 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்த நடிகர்கள் ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை காண வந்தனர்.