அஜித் நடித்த 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' ரீ ரிலீஸ்..?
Wed Apr 09 2025 10:06:35 AM

நடிகர் அஜித் நடித்த 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி, அஜித் குமார், ஐஸ்வர்யா ராய், தபு ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'. இந்தப்படம் அந்த காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் வரவேற்பு பெறுகிறது .
சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பழைய படங்களை ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகமாகியுள்ளது. இந்த வரிசையில் கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தை வருகின்ற மே 1ம் தேதி அஜித் பிறந்த நாளில் திரைக்கு கொண்டு வருவதற்கான ரீ மாஸ்டர் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.