எத்தனை இடத்தில் கட் ?... ‘துணிவு’ படத்தின் சென்சார் தகவல் !

thunivu

‘துணிவு’ படத்தின் சென்சார் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

எச் வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் ‘துணிவு’ திரைப்படம் உருவாகியுள்ளது. உண்மையில் நடந்த வங்கிக் கொள்ளையை வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தில் மாறுபட்ட இரண்டு தோற்றத்தில் அஜித் நடித்துள்ளார்.

thunivu

இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில் இப்படம் சென்சாருக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றது. அப்போது படத்தை பார்த்த அதிகாரிகள் இரண்டு இடங்களில் வசனங்களை ம்யூட் செய்ய அறிவுறுத்தியுள்ளனர். இதையொட்டி இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று வெளிநாடுகளில் உள்ள விநியோகஸ்தர்களுக்கும் சென்சாருக்காக இப்படம் அனுப்பப்பட்டுள்ளது. 


 

Share this story