கொஞ்சம் பட்டாச அதிகமாக வாங்கி வைங்க... ‘துணிவு’ படம் குறித்து செம அப்டேட் கொடுத்த பிரபலம் !

thunivu

‘துணிவு’ படத்தின் முக்கிய அப்டேட்டை அப்படத்தின் ஒளிப்பதிவாளர் தெரிவித்துள்ளார். 

அஜித் திரைப்படங்கள் என்றாலே எப்போதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் ‘வலிமை’ படத்திற்கு பிறகு எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியிடப்பட உள்ளது. 

thunivu

பொதுவாக அஜித் திரைப்படங்கள் என்றாலே ப்ரோமோஷன் பணிகள் எதுவும் நடக்காது. பெரிய அளவில் இசை வெளியீட்டு விழா என எதுவும் இருக்காது. ஆனால் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கியுள்ள லைக்கா நிறுவனம் வெளிநாடுகளில் ‘துணிவு’ படத்தை ப்ரோமோஷன் செய்து வருகிறது. 

இந்த படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை ஒளிப்பாளர் நீரவ் ஷா வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இப்போதுதான் சிலவற்றை நான் பார்த்தேன். கொஞ்சம் அதிகமாக பட்டாசுகளை வாங்கி வையுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அநேகமாக அவர் சொல்வது டிரெய்லரை தான் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

Share this story