இரட்டை வேடங்களில் நடிக்கும் அஜித்.. 'விடாமுயற்சி' குறித்து ஒரு சுவாரஸ்சிய அப்டேட் !

ak 62

அஜித் நடிப்பில் உருவாகும் 'விடாமுயற்சி' படத்தில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

அஜித்தின் 62 வது படத்தின் அறிவிப்புக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். இதையடுத்து மே 1-ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளையொட்டி இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. லைக்கா தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட லைக்கா முடிவு செய்துள்ளது. 

ak 62

‘தடம்’, ‘கலகத்தலைவன்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய முதல் திருமேனி இந்தப் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். தற்போது முதற்கட்ட பணிகளை செய்து வரும் இயக்குனர் மகிழ் திருமேனி, அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளார். தொடங்கும் படப்பிடிப்பு அடுத்து ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இதையடுத்து வெளிநாடுகளில் சில நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

ak 62

இந்நிலையில் முழுக்க முழுக்க ஆக்‌ஷனில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே வாலி, அசல், வில்லன், பில்லா ஆகிய படங்களில் இரட்டை வேடங்களில் அஜித் நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இரட்டை வேடங்களில் அஜித் நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  அஜித் இரு வேடங்களில் நடிக்கவுள்ளதால் இயக்குனர் மகிழ் திருமேனி இரு ஹீரோயின்களை தேடி வருகிறார்.

அந்த வகையில் நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய், கங்கனா ரனாவத் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் நடிகை திரிஷா ஒரு கதாநாயகியாக உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே உலக பைக் பயணத்தின் ஒரு பகுதியை நிறைவு செய்த நடிகர் அஜித், சமீபத்தில் சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story