அஜித்திற்கு வில்லனாகும் ‘மாஸ்டர்’ பட நடிகர்... ‘விடாமுயற்சி’ சூப்பர் அப்டேட்

vidamuyarchi
 அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

அஜித்தின் 62 வது படத்தின் அறிவிப்புக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். இதையடுத்து மே 1-ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளையொட்டி இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ‘தடம்’, ‘கலகத்தலைவன்உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய முதல் திருமேனி இந்தப் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

vidamuyarchi

லைக்கா தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட லைக்கா முடிவு செய்துள்ளதுதற்போது முதற்கட்ட பணிகளை செய்து வரும் இயக்குனர் மகிழ் திருமேனி, அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளார். புனேவில் தொடங்கும் இந்த படப்பிடிப்பு அடுத்து சென்னைஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இதையடுத்து வெளிநாடுகளில் சில நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

vidamuyarchi

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிகர் அர்ஜூன் தாஸ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்திற்கு அவர் மெயின் வில்லனாக நடிக்கவுள்ளதாக தற்போது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் அர்ஜூன் தாஸ்கைதிபடத்தின் மூலம் பிரபலமானவர். அதன்பிறகுமாஸ்டர்படத்தில் இரண்டாவது வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this story