‘குட் பேட் அக்லி’ டப்பிங்கை தொடங்கிய அஜித்.. ஆதிக் ரவிச்சந்திரனின் நெகிழ்ச்சி பதிவு..!
ஒவ்வொரு ஆண்டும் அஜித் அவர்களின் குரலை கேட்பதற்காக திரையரங்கில் காத்திருப்பேன் என்றும், அவருடைய படத்தை இயக்கியதன் மூலம் டப்பிங் போது அவருடைய குரலை நேரில் கேட்டேன் என்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து உருவாக்கி வரும் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில், இந்த படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கி விட்டதாக தெரிகிறது. முதல்கட்டமாக அஜித் டப்பிங் பணிகளை செய்த நிலையில், இது குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
Every year, I wait to hear Sir’s voice in the theatre. Now God, Universe & Sir were very kind enough to let me hear you Dub & Work with you sir. This Year started and completed with a beautiful journey ‘Good Bad Ugly’, Will treasure these memories Forever. Always grateful for u… pic.twitter.com/E4DsXds3Kd
— Adhik Ravichandran (@Adhikravi) December 29, 2024
சற்று முன் அவர் தனது சமூக வலைத்தளத்தில், "ஒவ்வொரு ஆண்டும் திரையரங்கில் அஜித் அவர்களின் குரலை கேட்க நான் காத்திருந்தேன். இப்போது கடவுளின் கருணையுடன் உங்களுடன் டப்பிங் பணியில் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த ஆண்டு ஒரு அழகான ஆண்டாகவும், ஒரு நல்ல பசுமையான பயணமாகவும் ’குட் பேட் அக்லி’ படத்தின் மூலம் தொடங்கி முடிவடைந்து விட்டது. இந்த நினைவுகளை நான் என் மனதில் எப்போதும் காப்பாற்றிக் கொள்வேன். உங்களை மிகவும் நேசிக்கிறேன்." என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் பரவி வருகிறது.