போர்ஷே ஜிடி3 கப் காரை டெஸ்ட் ட்ரைவ் செய்த அஜித்.. வீடியோ வைரல் ..!

ajith

நடிகர் அஜித் துபாயில் உள்ள ஆட்டோட்ரோம் ரேஸ் டிராக்கில் போர்ஷே ஜிடி3 கப் கார் மாடலை டெஸ்ட் டிரைவ் செய்த வீடியோவை, அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


"துபாய் ஆட்டோட்ரோம் சர்வதேச மையத்தில் சோதனை ஓட்டம் செய்ததில் மகிழ்ச்சி," என கேப்ஷனுடன் வெளியிடப்பட்ட இந்த வீடியோ இப்போது பரவலாக பகிரப்படுகிறது. இந்த போர்ஷே ஜிடி3 கப் கார் ரேஸ் போட்டிக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், மணிக்கு 300 முதல் 350 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது.ajith

இந்த காரை ஓட்டுவதற்கு முன் சோதனை ஓட்டம் செய்வது மிகவும் முக்கியம்; அப்போதுதான் ரேசிங் டெக்னிக்களைப் புரிந்து கொள்ள முடியும் மற்றும் ஓட்டும் பொழுது தன்னம்பிக்கை அதிகரிக்க உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.



துபாயில் உள்ள ஆட்டோட்ரோம் ரேசிங் சர்க்யூட் உலக புகழ்பெற்றது என்பதுடன், இதில் அதிவேகமாக பயணிக்க தனி திறமை தேவைப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது. பல சர்வதேச கார் போட்டிகள் இங்கே நடந்திருக்கும் நிலையில், அஜித்தும் இப்போது அங்கு டெஸ்ட் டிரைவ் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this story