கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திய படக்குழு.. ‘துணிவு’ படத்தின் புதிய அறிவிப்பு !

thunivu

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

thunivu

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. அஜித்தின் மாஸ் &  கிளாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளை வெளிநாடுகளில் லைக்கா நிறுவனம் செய்து வருகிறது. அதேநேரம் இப்படத்தின் டிரெய்லர் நாளை உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புட்ஜ் கலிபாவில் வெளியிடப்படவுள்ளது. 

thunivu

டிரெய்லர் வெளியிடப்படுவதையொட்டி படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இப்படத்தின் கேரக்டர்கள் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர்கள் மோகனசுந்தரம் ‘மை பா’ என்ற கதாபாத்திரத்திலும், பிரேம் ‘பிரேம்‘ என்ற கதாபாத்திரத்திலும், பக்ஸ் ராஜேஷ் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதற்கான போஸ்டர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

thunivu

ஏற்கனவே ஜிப்ரான் இசையில் மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சமுத்திரகனி, வீரா, ஜான் கொக்கன், பிரேம், பக்ஸ், மோகனசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story