விறுவிறுப்பாக தயாராகும் ‘சில்லா சில்லா’ பாடல்... ‘துணிவு’ ஷூட்டிங் அப்டேட் !

thunivu

‘துணிவு’ படத்தின் ‘சில்லா சில்லா’ பாடலின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘துணிவு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

thunivu

இந்த படத்தில் இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு நடத்தப்படாமல் உள்ளது. அதில் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ பாடலின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோபுரம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியாகவுள்ள இந்த பாடலை அனிரூத் பாடியுள்ளார். இந்த பாடலை வைசக் எழுதியுள்ளார். ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். 

thunivu

இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனமும், வெளிநாட்டு உரிமையை லைக்கா நிறுவனமும் கைப்பற்ற்றியுள்ளது. 

 

Share this story