‘துணிவு’ முதல் நாள் வசூல் எவ்வளவு ?... வியக்க வைக்கும் தகவல் !

thunivu

 அஜித்தின் ‘துணிவு’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

எச் வினோத் - அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான திரைப்படம் ‘துணிவு’. ‘வலிமை’ அஜித்திற்கு கொஞ்சம் தடுமாற்றம் கொடுத்த நிலையில் இந்த படம் அதை மாற்றி அமைத்துள்ளது. ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

thunivu

இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்புடன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அஜித்தின் மிரட்டலான நடிப்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. சென்னையில் வங்கி ஒன்றில் நடைபெறும் கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

thunivu

இந்த படம் நேற்று பொங்கலையொட்டி வெளியான நிலையில் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ஒரு நாள் வசூல் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஒரு நாள் தமிழக வசூல் 21.60 கோடியாகும். இதற்கிடையே துணிவுக்கு போட்டியாக வெளியான ‘வாரிசு’ திரைப்படம் 20.76 கோடி மட்டுமே வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

 

Share this story