'துணிவு' ஃப்ர்ஸ்ட் சிங்கிள் எப்போது ?... அதிரடி அறிவிப்பு !

thunivu

'துணிவு' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் எப்போது வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

எச் வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் ‘துணிவு’ திரைப்படம் உருவாகி வருகிறது. அஜித்தின் 61வது படமாக உருவாகும் இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களுக்கு பிறகு இந்த கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ளது. 

thunivu

வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வருகின்றனர்.அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது ப்ரோமோ பாடல் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள 'சில்லா சில்லா' என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

Share this story