முக்கிய நாளில் வெளியாகும் ‘துணிவு’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள்... வெளியானது புதிய தகவல் !

thunivu

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

எச் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள திரைப்படம் திரைப்படம் ‘துணிவு’. பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வரும் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் குஷியாகி உள்ளனர். 

thunivu

ஏற்கனவே இந்த படத்திலிருந்து ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளது. அதனால் படத்திலிருந்து அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி வரும் நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிரூத் பாடியுள்ளார். சில்லா சில்லா என்று தொடங்கும் என தொடங்கும் இந்த பாடலை வைசாக் எழுதியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. 

 

Share this story