ஓடிடியிலும் கலக்கும் அஜித்தின் ‘துணிவு’... உற்சாகமான ரசிகர்கள் !

thunivu
 நடிகர் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி ‘துணிவு’ திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியானது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

thunivu

ஒரு வங்கியில் கணக்கில் காட்டப்படாத 500 கோடியை கொள்ளையடிக்கும் நோக்கில் ஒரு கும்பல் நுழைகிறது. இதை தடுக்க தானும் கொள்ளையன் என்று கூறி அஜித் சம்பவம் செய்யும் படம் தான் ‘துணிவு’. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்கில் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் இப்படம் நெட்ஃபிளிக்ஸில் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரண்டிலும் இப்படம் வரவேற்பை பெற்றுள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story