ஓடிடியில் ‘துணிவு’ எப்போது ? ... புதிய தகவல் !

thunivu

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி ‘துணிவு’ திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியானது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

thunivu

ஒரு வங்கியில் கணக்கில் காட்டப்படாத 500 கோடியை கொள்ளையடிக்கும் நோக்கில் ஒரு கும்பல் நுழைகிறது. இதை தடுக்க தானும் கொள்ளையன் என்று கூறி அஜித் சம்பவம் செய்யும் படம் தான் ‘துணிவு’. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்கில் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். 

இந்த படம் இதுவரை 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் நெட்ஃபிளிக்ஸில் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story