அல்ட்ராசிட்டி செய்யும் அஜித்.. ‘துணிவு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு !

thunivu

அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

எச்.வினோத் - அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், வீரா, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

thunivu

உண்மையில் நடந்த வங்கிக் கொள்ளையை வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தில் மாறுபட்ட இரண்டு தோற்றத்தில் அஜித் நடித்துள்ளார். தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

thunivu

போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜனவரி 11-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story