பொங்கலுக்கு வெளியாகிறது அஜித்தின் 'துணிவு'... போனி கபூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

thunivu

அஜித்தின் 'துணிவு' படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘துணிவு’. 80-களில் நடந்த பஞ்சாப் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று ஹீரோவாகவும், மற்றொன்று வில்லனாகவும் இருக்கும் என தெரிகிறது. மங்காத்தாவிற்கு பிறகு இதுபோன்ற கதைக்களத்தில் மீண்டும் நடிகர் அஜித் நடிப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு படத்திற்கு ஏற்பட்டுள்ளது. 

thunivu

இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. இதையடுத்து தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

thunivu

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என போனி கபூர் அறிவித்துள்ளார். அதேநேரம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுதவிர தொலைக்காட்சியை உரிமையை கலைஞர் டிவியும், டிஜிட்டல் உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளது. இதற்கிடையே விஜய்யின் 'வாரிசு' திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. விஜய் மற்றும் அஜித் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Share this story